குடிநீரின் மூலமாக பரவும் நோய்களை கட்டுப்படுத்தும் வழிகள் :

 • நன்கு கொதிக்க வைத்த வடிகட்டிய குடிநீரையே பருகுங்கள் (கொதிக்க வைத்த குடிநீர் என்பது நீரானது 15 நிமிடம் கொதிநிலையில் இருத்தல் என்று பொருள்)

 • கைகளை சோப்பு போட்டு நன்றாக கழுவுதல்

 • மலம் கழித்த பின்பு கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவுதல்

 • குழந்தைகளுக்கு சோப்பு போட்டு கைகழுவுதலின் முக்கியத்துவத்தை உணர்த்தி வழிகாட்டல்

 • விரல் நகம் பராமரித்தல்

 • திறந்தவெளியில் மலம் கழிக்காதிருத்தல்

 • வீட்டு வளர்ப்பு பிராணிகளின் கழிவுகள் குடிநீரில் கலந்திடாமல் பராமரித்தல்

 • வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகளை முறையாக பராமரித்தல்

 • நீர் தேக்க தொட்டியினை மூன்று மாதத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்துதல்

 • வீட்டில் பயன்படுத்துகின்ற குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தின் வடிப்பானை முறையான இடைவெளியில் மாற்றுதல்

 • முட்டை காய்கறிகள் மற்றும் இதர மாமிச உணவுகளை நன்றாக கழுவி மற்றும் நன்கு வேக வைத்து பின்பு உண்ணுதல்

 • பொதுவான சுற்றுப்புற சுகாதாரம் பேனுதல்.